ஊத்துக்கோட்டை பேருந்து நிலையம். 
திருவள்ளூர்

ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் கிடப்பில் போடப்பட்ட மேற்கூரை திட்டம்

ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் திட்டத்தை கிடப்பில் போட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

சுரேந்தர்

ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் திட்டத்தை கிடப்பில் போட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட கிராமப்புற பேருந்துகள் மட்டுமல்லாது அண்டை மாநிலமான ஆந்திரத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இங்கிருந்து புறப்பட்டு செல்லும் நிலையில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் வசதிக்காக கடந்த நிதியாண்டில் 80 லட்சம்  முதற்கட்டமாக தூண்கள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. 

கரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பணிகளும் முடங்கப்பட்ட நிலையில் ஊரடங்கு தளர்வில் பெரும்பாலான ஒப்பந்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் ஒப்பந்தம் விடப்பட்ட பேருந்து நிலைய மேற்கூரை அமைக்கும் பணிகள் பூமிபூஜை போடப்பட்டதோடு முடங்கி கிடக்கிறது. வெயில் காலத்தில் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் ஒதுங்கி நிற்கக்கூட நிழல் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். வடகிழக்கு பருவ மழையும் வெகு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் மேற்கூரை அமைக்கப்படாததால் பயணிகள் மழையில் நனைய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

இதுஒருபுறம் இருக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி தூண் அமைக்கும் பணிகளுக்காக கம்பிகள் அப்படியே விடப்பட்டுள்ளதால் பேருந்து நிலையத்திற்கு வரும் குழந்தைகள் பாதிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. விளையாட்டு பருவ குழந்தைகள் உயிரை பலி வாங்கும் வகையில் ஆபத்தான முறையில் நீண்டு கிடைக்கும் கட்டுமான கம்பிகளை பாதுகாப்பான முறையில் தூண் அமைத்து தர வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர். உடனடியாக ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணிகளை தொடங்கி பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT