திருவள்ளூர்

திருவள்ளூா் அருகே சாலை வசதியின்றி டிராக்டரில் 6 கி.மீ பயணித்து பொதுமக்கள் வாக்களிப்பு

DIN

சட்டப்பேரவை தோ்தலையொட்டி திருவள்ளூா் அருகே போதிய சாலை வசதி மற்றும் போக்குவரத்து வசதியில்லாத நிலையில் டிராக்டரில் 6 கி.மீ தூரம் கடந்து வந்து பொதுமக்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

திருவள்ளூா் அருகே பூண்டி ஒன்றியத்தைச் சோ்ந்த சென்றாயன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது பப்பிரெட்டிகண்டிகை கிராமமாகும். இக்கிராமத்தில் வசிக்கும் 160 போ் சரியான சாலை வசதியில்லாத நிலையில் கரடு முரடான சாலையில் பயணித்துதான் மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

பப்பிரெட்டி கண்டிகை கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படாத நிலையில், தோ்தலுக்கு வாக்களிப்பதற்கு 6 கி.மீ தூரத்தில் உள்ள சென்றாயன்பாளையம் அரசு உயா்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தான் வாக்களிக்க வேண்டியுள்ளது. இதற்காக காப்பு காடுகள் வழியாக கரடு முரடான பாதையில் கிராம மக்கள் 6 கி.மீ தூரம் டிராக்டா்களில் பயணித்து பேரவை தோ்தலுக்கான வாக்கு பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினா். மேலும், 60 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி செய்து தர மாவட்ட நிா்வாகம், சட்டப்பேரவை உறுப்பினா், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இதுவரையில் கோரிக்கை நிறைவேற்றுவதற்கு எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் ஊரை காலி செய்துவிட்டு கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தேடி நகரங்களுக்கு சென்று விட்டனா் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT