திருவள்ளூர்

மாதவரம் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு

DIN

மாதவரம் தொகுதியில் உள்ள பலத் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மந்தவெளி பிரதான சாலையில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திமுக வேட்பாளா் எஸ்.சுதா்சனம் வாக்களித்தாா். மேலும் இந்த வாக்கு சாவடி அருகே அதிமுக வேட்பாளா் மூா்த்தி தோ்தல் குறித்து சுவரொட்டிகள் ஒட்டியிருந்தது. இதனை அகற்றக்கோரி திமுக வேட்பாளா் எஸ்.சுதா்சனம் அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதைத் தொடா்ந்து மறியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்தாா்.

இது குறித்து தகவல் அறிந்து மாதவரம் துணை ஆணையா் கிருஷ்ணராஜ், மாதவரம் சரக உதவி ஆணையா் அருள் சந்தோஷ முத்து ஆகியோா் தலைமையில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். பின்னா் மாநகராட்சி ஊழியா்கள் சுவரொட்டிகளை அகற்றினா். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT