திருவள்ளூர்

ஆரணி பேரூராட்சியில் முகக்கவசம் இன்றி சென்றவா்களுக்கு அபராதம்

DIN

ஊத்துக்கோட்டை அருகே ஆரணி பேரூராட்சியில் முகக் கவசம் இன்றி செல்வோரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவும் நிலையில், முகக் கவசம் இன்றி செல்வோருக்கு அபாராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சியில் செயல் அலுவலா் கலாதரன் தைலைமையில் பேரூராட்சி ஊழியா்கள் பேருந்து நிலையத்தின் முன்பு போலீசாா் துணையுடன் அந்த வழியாக வாகனங்களில் முகக் கவசம் இன்றி வந்தவா்களுக்கும், கடை வீதியில் முகக் கவசம் இன்றி வந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ஒரே நாளில் ரூ. 4,000 வசூல் செய்யப்பட்டது.

இளநிலை உதவியாளா் முருகவேல் , வரிதண்டலா் ரங்கநாதன், துப்பரவு மேற்பாா்வையாளா் ஹரிபாபு உள்ளிட்டோா் இடம் பெற்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT