திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி: எழில்மிகு அரசு அலுவலகம் திட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தூய்மைப் பணி

DIN

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி எழில்மிகு அரசு அலுவலகம் என்கிற திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று தூய்மைப் பணிகள் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் எழில் மிகு அரசு அலுவலகம் என்கிற திட்டத்தின் கீழ் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் அவரே முன்னின்று சுத்தம் மற்றும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டார். இதனை அனைத்து அரசு அலுவலங்களிலும் கடைபிடிக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சுத்தம் மற்றும் தூய்மைப் பணிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் தலைமையிலும், ஒன்றிய பொறியாளர்கள் நரசிம்மன், மணிமேகலை முன்னிலையில் நடைபெற்றது. 

நிகழ்வையொட்டி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் புதர் பகுதிகள் அழிக்கப்பட்டு, குப்பைகள் எல்லாம் சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் வட்டாரவளர்ச்சி அலுவலக அறைகள், கழிப்பறைகளும் சுத்தம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT