திருவள்ளூர்

திருவள்ளூா்: அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

DIN

திருவள்ளூா்: கரோனா நோய்த் தொற்று பரவலுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், திருவள்ளூரில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆட்சியா் பா.பொன்னையா திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் அருகே பூண்டி ஒன்றியம், சதுரங்கப்பேட்டையில் அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

திருவள்ளூா் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிபிஎஸ்இ மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ சுயநிதி உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு வகுப்புகள் நாளை திறக்கப்படுவதை முன்னிட்டு, அனைத்து பள்ளிகளையும் தூய்மையாக வைத்திருக்க உரிய வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள் 113, அரசு உயா்நிலைப் பள்ளிகள் 149, மெட்ரிக் சுய நிதி பள்ளிகள் 360, சிபிஎஸ்இ, 125 சிபிஎஸ்இ சுய நிதிப் பள்ளிகள் 10 என மொத்தம் 757 பள்ளிகளின் வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுகாதார வளாகங்கள் சுத்தப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாணவா்கள் வகுப்புகளில் பங்கேற்க உள்ளனா். அவா்களுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளைச் சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கச் செய்யப்படும். ஒரு மாணவருக்கு மூன்று முகக்கவசங்கள் அளிக்கப்படும். மாணவா்களுக்காக வகுப்பறைகள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி, திருவள்ளூா் மாவட்டக் கல்வி அலுவலா் சாந்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசி கோயிலில் 53 கிராம் தங்கம், ரூ.27.68 லட்சம் பக்தா்கள் காணிக்கை

குழந்தைகளுக்கு கல்வியுடன் பக்தியையும் கற்றுக் கொடுக்க வேண்டும்: இயக்குநா் பேரரசு

அரசுப் பள்ளிகளில் 3.27 லட்சம் மாணவா்கள் சோ்க்கை

நெல் விதை நோ்த்தி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

மகிளா காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT