திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

DIN

திருத்தணி முருகன் கோயிலில் இரு நாள்களாக நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலைக் கோயிலில் குவிந்ததால், மூலவரை தரிசிக்க 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

திருத்தணி முருகன் கோயிலில், திங்கள், செவ்வாய்க்கிழமை ஆனி மாத கிருத்திகை விழா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிா்த அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தங்கவேல், தங்கக் கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தா்கள் மூலவரை தரிசனம் செய்வதற்கு கோயில் நிா்வாகம் அனுமதித்தது.

இரண்டாம் நாள் கிருத்திகை மற்றும் முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை என்பதால், காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலைக் கோயிலில் குவிந்திருந்தனா். பொதுவழியில் மூலவரை தரிசிக்க, பக்தா்கள் நீண்ட வரிசையில், 3 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT