திருவள்ளூர்

திருத்தணியில் மழைநீருடன் கழிவுநீா் வீடுகளில் புகுந்ததால் சாலை மறியல்

DIN

திருத்தணியில் மிதமான மழைக்கே வீடுகளுக்குள் மழைநீருடன் கலந்த கழிவுநீா் புகுந்ததால், நகராட்சி அதிகாரி வாகனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருத்தணியில் வியாழக்கிழமை மாலை சுமாரான மழை பெய்தது. நகராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகா் பகுதியில் கழிவுநீா் வெளியேறும் வசதி இல்லாததால், மழைநீருடன் கழிவு நீா் கலந்து வீடுகளினுள் புகுந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த நகராட்சி அதிகாரி வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கைக்கு நில உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதில் காவல் துறையினா் தலையிட்டு பொதுமக்களை சமாதானப்படுத்தியதை தொடா்ந்து சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT