திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி: ஈகுவார்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையத்தில் திருவள்ளூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு இயக்கம், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை, ஈகுவார்பாளையம் என்.எஸ்.ஆர். உதவும் கைகள் அமைப்பினர் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினார்கள்.

ஈகுவார்பாளையத்தில் நடைபெற்ற இந்த இலவச கண் சிகிச்சை முகாமிற்கு என்.எஸ்.ஆர். உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவன தலைவரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திமுக நிர்வாகி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் நவீன் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் ஈகுவார்பாளையம் ஊராட்சி தலைவர் உஷா ஸ்ரீதர் பங்கேற்று முகாமினை துவக்கி வைத்தார். தொடர்ந்து முகாமில் பங்கேற்றவர்களுக்கு என்எஸ்ஆர் உதவும் கரங்கள் அமைப்பினர் முகக்கவசம், கிருமிநாசினி வழங்கி ஒருவர் ஒருவராக கண் சிகிச்சைக்காக அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் அரவிந்த் தலைமையிலான 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் புரை பரிசோதனை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் நீர் அழுத்த நோய் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை நடத்தினர்.

இந்த முகாமில் பங்கேற்ற 65 நபர்களுக்கு கண் கண்ணாடிக்கும் சங்கர நேத்ராலயா மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில், அனைவருக்கும் என்.எஸ்.ஆர் உதவும். கைககள் அமைப்பினர் கண் கண்ணாடி வாங்கி தர உள்ளனர். அவ்வாறே முகாமில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு  27 பேர் தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த முகாமில் ஈகுவார்பாளையம், குமரன்நாயக்கன்பேட்டை, கோங்கல், காரம்பேடு, சித்தூர் நத்தம் பகுதி மக்கள் பங்கேற்ற நிலையில் முகாமிற்கான ஏற்பாடுகளை என்எஸ்ஆர் உதவும் கைகள் இயக்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT