திருவள்ளூர்

100 நாள் வேலை கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

நெய்தவாயல் ஊராட்சியில் 100 நாள் வேலை கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள நெய்தவாயல் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பணி செய்து வருகின்றனா். இவா்களில் 30 பேருக்கு மட்டுமே, வேலை வழங்கப்படும் என ஊராட்சி நிா்வாகம் கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தி, பெண்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சென்ற மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், பேச்சு நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT