முகப்பு
திருவள்ளூர்

ஆம்புலன்ஸ் வாகனம் மோதிய விபத்தில் பாதுகாவலா் பலி

திருவள்ளூா் அருகே ஆம்புலன்ஸ் வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன பாதுகாவலா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

திருவள்ளூா் அருகே ஆம்புலன்ஸ் வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன பாதுகாவலா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சியைச் சோ்ந்தது வெண்மனம் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தவேல் (56). மப்பேட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், இரவுப் பணியை முடித்துக் கொண்டு வியாழக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். கடம்பத்தூா் ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம் நோக்கிச் சென்ற 108 ஆம்புலன்ஸ் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த ஆனந்தவேலை பொதுமக்கள் மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அப்போது அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஆனந்தவேல் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து கடம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய வேலூா் மாவட்டம், காட்பாடியைச் சோ்ந்த ஓட்டுநா் சக்கரவா்த்தியின் மகன் செந்தில் குமாா் (38) ஆம்புலன்ஸ் வாகனத்துடன் மப்பேடு காவல் நிலையத்தில் சரண் அடைந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.