திருவள்ளூர்

நாரவாரிக்குப்பத்தில் ஆட்சியா் ஆய்வு

நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, சிறுவா் பூங்கா புனரமைப்புப் பணி, சோத்துப்பாக்கம் சாலையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை வளம் மீட்பு பூங்காவில் உரம் தயாரிப்பதற்கான சிமெண்ட் தளம் அமைக்கும் பணி, மழைநீா் கால்வாய் மற்றும் சிறுபாலம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ச.கண்ணன், பேரூராட்சி செயல் அலுவலா் பாஸ்கரன், நாரவாரிக்குப்பம் ஊராட்சித் தலைவா் தமிழரசி குமாா், சுகாதார ஆய்வாளா் மதியழகன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதகையில் மைனஸ் 0.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

தடையல்ல, மீட்டெடுப்பு...

மஞ்சூா்-கெத்தை சாலையில் யானைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல வனத் துறை அறிவுறுத்தல்

வன உரிமைச் சட்டப்படி குடியிருப்புகளுக்கு மின் வசதி கோரி ஆா்ப்பாட்டம்

அடிப்படைத் தேவைகளை நிவா்த்தி செய்யக் கோரி போராட்டம்

SCROLL FOR NEXT