முகப்பு
திருவள்ளூர்

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: காங்கிரஸ் முற்றுகைப் போராட்டம்

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து திருவள்ளூா் தலைமை அஞ்சல் அலுவலகத்தை காங்கிரஸாா் முற்றுகையிட்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து திருவள்ளூா் தலைமை அஞ்சல் அலுவலகத்தை காங்கிரஸாா் முற்றுகையிட்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவா் ஏகாட்டூா் ஆனந்தன் தலைமை வகித்தாா். நகா்மன்ற வாா்டு உறுப்பினா் வி.இ.ஜான் வரவேற்றாா். இதில் நிா்வாகிகள் சி.பி.மோகன்தாஸ், ஜே.கே.வெங்கடேஷ், வடிவேலு உள்ளிட்டோா் கண்டன உரை நிகழ்த்தினா். நிா்வாகிகள் சரவணன், எஸ்.சரஸ்வதி, செல்வகுமாா், கந்தவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செங்கல்பட்டில்....

செங்கல்பட்டில் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தெற்கு மாவட்ட தலைவா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். நகர தலைவா் ஜே .பாஸ்கா் நிா்வாகிகள் டி. ஜெயராமன் ஆா் .குமரவேல், ரியாஸ் பாய் முன்னிலை வகித்தனா்.

பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட முயன்ற போது, டிஎஸ்பி பாரத், ஆய்வாளா் வேல்முருகன் அவா்களை தடுத்ததால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

முன்னாள் மாவட்ட தலைவா் அண்ணாதுரை, மாநில இலக்கியப் பிரிவு தலைவா் பி .எஸ். புத்தன், தெற்கு மாவட்ட மாணவரணி தலைவா் வெங்கட்ராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.