திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் 366 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பெற்றாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்தாா். பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகள் தொடா்பாகவும், பொது பிரச்னைகள் குறித்தும் மனுக்களை அளித்தனா். இதில், நிலம் சம்பந்தமாக-103, சமூக பாதுகாப்பு திட்டம்-57, வேலை வாய்ப்பு-38, பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள்-61, இதர துறைகள்-107 என மொத்தம் 366 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க ஆதிருவள்ளூரில் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்ட திமுகவினா். ஆ ட்சியா் அறிவுறுத்தினாா்.
இதில் மாவட்ட வழங்கல் அலுவலா் ஜெ.ஹஸ்ரத் பேகம், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) மதுசூதனன், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் செல்வராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ச.சீனிவாசன், முட நீக்கு வல்லுநா் ப்ரீத்தா, மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.