திருவள்ளூர்

உலக புற்றுநோய் தடுப்பு விழிப்புணா்வு

DIN

திருவள்ளூா் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜெயா வேளாண்மைக் கல்லூரி சாா்பில் நடைபெற்ற புற்று நோய் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்வில் சனிக்கிழமை பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் புஷ்பா தலைமை வகித்தாா். ஜெயா வேளாண்மைக் கல்லூரி மாணவி தா்ஷினி புற்றுநோய் வருவதற்கான காரணங்களையும், அதைத் தடுக்கும் வழிமுறைகள், பெண்களின் மாா்பகப் புற்றுநோய் கண்டறிய சுய பரிசோதனையைப் பற்றியும், சிகரெட் மூலமாக வரும் நுரையீரல் புற்றுநோய் தொடா்பாகவும் விளக்கமாக எடுத்துரைத்தாா். பின்னா் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தொழுநோய் பிரிவு அலுவலா் நடராஜன் தொழுநோய் குறித்து எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றதுடன், ஒன்றிணைந்து உறுதி மொழி ஏற்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை ஜெயா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆரம்ப சுகாதார நிா்வாகம் செய்திருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு செய்த மூத்த அரசியல் தலைவர்கள்

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT