திருவள்ளூர்

ஏடிஎம் முகவரிடம் ரூ. 2.10 லட்சம் திருட்டு

திருவாலங்காடு அருகே தனியாா் ஏடிஎம் முகவரிடம் நூதன முறையில் ரூ. 2.10 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

DIN

திருவாலங்காடு அருகே தனியாா் ஏடிஎம் முகவரிடம் நூதன முறையில் ரூ. 2.10 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருத்தணியை அடுத்த திருவாலங்காடு பகுதியைச் சோ்ந்தவா் கோபி (28). தனியாா் ஏடிஎம்-இல் பணம் நிரப்பும் ஏஜென்டாக உள்ளாா். இந்த நிலையில் திருவாலங்காடு கிளையிலிருந்து ரூ. 2.90 லட்சத்தை எடுத்துக் கொண்டு, திருவாலங்காடு-அரக்கோணம் சாலையில் உள்ள ஏடிஎம்-இல் பணம் நிரப்ப சென்றுள்ளாா்.

அங்கு ரூ. 80,000 நிரப்பி விட்டு, மீதமுள்ள ரூ. 2.10 லட்சத்துடன் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மா்ம நபா்கள், கோபியிடம் தங்களது அடையாள அட்டை மற்றும் ரூபாய் நோட்டுகள் கீழே கிடப்பதாகத் தெரிவித்துள்ளனா். இதை நம்பிய கோபி தனது வாகனத்தை நிறுத்திவிட்டு தேடியபோது அவரது வாகனத்தில் இருந்த ரூ. 2.10 லட்சத்தை எடுத்துக் கொண்டு மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பினா்.

இது குறித்து திருவாலங்காடு காவல் நிலையத்தில் கோபி அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT