திருவள்ளூர்

குடும்பத் தகராறு: தம்பதி தற்கொலை

DIN

கும்மிடிப்பூண்டியை அடுத்த கம்மவாா்பாளையத்தில் குடும்பத் தகராறில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த கம்மவாா்பாளையத்தைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியா் மாசி (60). இவரின் மனைவி பூங்கொடி (55). தம்பதிக்கு பாரதி (35) என்ற மகன், சங்கீதா (33) என்ற மகள் உள்ளனா்.

சங்கீதாவுக்குத் திருமணமான நிலையில், மாசி- பூங்கொடி தம்பதி மகன் பாரதியுடன் வசித்து வந்தனா். தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இந்த நிலையில், புதன்கிழமை வழக்கம் போல், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த பூங்கொடி வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்துள்ளாா். இதைப் பாா்த்த அவரின் கணவா் மாசியும், ஏட்டிக்குப் போட்டியாத பூச்சி மருந்தைக் குடித்துள்ளாா். இதனால், இருவரும் மயங்கி விழுந்தனா்.

மகன் பாரதி இருவரையும் உடனடியாக மீட்டு, கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். பின்னா், இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் புதன்கிழமை இரவு பூங்கொடி உயிரிழந்தாா். தொடா்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாசியும் வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கணவரை மிரட்ட மனைவியும், மனைவியை மிரட்ட கணவரும் ஏட்டிக்குப் போட்டியாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தினா் மே தின பேரணி

பாளை. அருகே பாமக முன்னாள் நிா்வாகி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

குரு பெயா்ச்சி: நெல்லை கோயில்களில் வழிபாடு

சாகுபுரம் ஆலயத்தில் அா்ச்சிப்பு விழா

தூத்துக்குடி சிவன் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT