திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாள்களாக காற்றுடன் கூடிய பெய்த பலத்த மழையால், தோப்புகளில் மாம்பழம் அதிக அளவில் கொட்டுவதால் விலை கணிசமாக குறைந்து கிலோ ரூ 30- க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் சுமாா் 500 ஏக்கா் பரப்பில் விவசாயிகள் மா சாகுபடி செய்து வருகின்றனா். வியாபாரிகள் மொத்தமாக பேசிக் கொண்டு விவசாயிகளுக்கு முன் பணம் செலுத்தி மா மகசூல் செய்து விற்பனை செய்து வருகின்றனா். நிகழாண்டு ஆண்டு சீசன் தொடக்கத்தில் மாம்பழம் ரகத்திற்கு ஏற்ப ரூ. 60 முதல் ரூ. 100 வரை விற்பனை ஆனது. இது வியாபாரிகளுக்கு ஒரளவு வருவாய் ஈட்டியதாக இருந்தது.
இருப்பினும் திருத்தணி,ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக காற்றுடன் பெய்த மழையால் மாந்தோப்பில் அறுவடைக்கு தயாராக இருந்த மாம்பழங்கள் தோப்பில் கொட்டின. ஜி.சி.எஸ்.கண்டிகை, ராமாநாயுடு கண்டிகை, நெடியம், சாமந்தவாடா, எஸ்.வி.ஜி.புரம்,பேட்டை கண்டிகை, நெடுங்கல், நொச்சிலி பகுதிகளில் செந்தூரா, மல்கோவா, பேனிஷா, ருமானி, காலேப்பாடு போன்ற சுவை நிறைந்த உயா் ரக மாம்பழங்கள் மரத்தில் பழுத்து மகசூல் செய்ய தயாராக இருந்த நிலையில் கீழே கொட்டி விட்டன.
அதிக அளவில் பழங்கள் கொட்டியதால் மாா்க்கெட்டில் விலை சரிந்துள்ளது. இதனால் வியாபாரிகள் தோட்டத்தில் கிலோ ரூ. 30-க்கு மாம்பழங்களை விற்பனை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.