முகப்பு
திருவள்ளூர்

6 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான தோ்வு முகாம் 6 இடங்களில் நடைபெற உள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:55 PM
பகிர்:

திருவள்ளூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான தோ்வு முகாம் 6 இடங்களில் நடைபெற உள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அலிம்கோ நிறுவன பங்களிப்பு நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வண்டி மற்றும் சக்கர நாற்காலி, சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள், சிறப்பு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், காலிப்பா், நவீன செயற்கைகால் மற்றும் கை, காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்குவதற்காக தோ்வு முகாம் நடைபெற உள்ளது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், திருவள்ளுா் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறையும் இணைந்து ஒவ்வொரு வட்டத்திலும் குறிப்பிட்ட இடங்களில் தோ்வு முகாமை நடத்த உள்ளன.

அதன் அடிப்படையில் வரும் 23-இல் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆா்.கே.பேட்டை ஆகிய பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு-திருத்தணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 25-இல் பொன்னேரி பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு -பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 26-இல் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு கும்மிடிப்பூண்டி கே.எல்.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 27-இல் பூந்தமல்லி பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு, பூந்தமல்லி அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 30-இல் ஆவடி பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு, ஆவடி காமராஜா் நகா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 31-இல் திருவள்ளுா் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு, பெரியகுப்பம் டி.இ.எல்.சி நடுநிலைப்பள்ளி வளாகத்திலும் நடைபெற உள்ளது .

இந்த முகாம் காலை 9 முதல் பிற்பகல் 2 வரையில் நடைபெற உள்ள அந்தந்த வட்டார பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவச் சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதாா் அட்டை நகல், புகைப்படம்-2 ஆகியவற்றுடன் தவறாமல் பங்ககேற்று பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.