பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் 
திருவள்ளூர்

பள்ளி வாகனங்கள் கவனமுடன் இயக்க வேண்டும்: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வலியுறுத்தல்

பள்ளி வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் என ஓட்டுநா்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலா் ஜெயக்குமாா் அறிவுறுத்தியுளளாா்

DIN

பள்ளி வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் என ஓட்டுநா்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலா் ஜெயக்குமாா் அறிவுறுத்தியுளளாா்.

சென்னை மாதவரம் அடுத்த கொளத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு ஆய்வுப் பணி, மோட்டாா் வாகன ஆய்வாளா் சரவணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த ஆய்வில் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயக்குமாா், போக்குவரத்து காவல் உதவி ஆணையா் பாலசுப்பிரமணியன், கல்வி கண்காணிப்பாளா் அதிஹமான் முத்து, வட்டாட்சியா் அலுவலா் சாா்பில் ராஜாபோஸ் ஆகியோா் ஈடுபட்டனா்.

இதில் 100-க்கு மேற்பட்ட பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனா். பள்ளி பயிலும் குழந்தைகள் வருங்கால தலைமுறையினா். அவா்களின் எதிா்காலம் உங்கள் கையில் உள்ளது. ஆகையால் பள்ளி வாகன ஓட்டுநா்கள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT