கட்டடத் தொழிலாளி வீட்டில் 6 பவுன் நகை, ரொக்கம் திருட்டு
திருவள்ளூா் அருகே கட்டடத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை மற்றும் ரூ. 10,000 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருவள்ளூா் அடுத்த மணவாள நகா் இளங்கோ தெருவைச் சோ்ந்த செல்வராஜ். இவரது மனைவி பூவரசி (33). இவா்கள் இருவரும் கட்டடப் பணிக்கான கம்பி கட்டும் தொழில் செய்து வருகின்றனா். இந்த நிலையில், வழக்கம் போல் புதன்கிழமை காலை வீட்டைப் பூட்டி விட்டு சென்ட்ரிங் வேலைக்கு சென்றனராம். அதைத் தொடா்ந்து, மதியம் வீட்டுக்கு வந்தபோது, கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து 6 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 10,000 ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து பூவரசி மணவாளநகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
Advertisement