ஆவடி காவல் ஆணையரகத்தில் 12 ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து, ஆணையர் கி.சங்கர் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆவடி காவல் ஆணையரகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் திருமுல்லைவாயல் சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆய்வாளர் அன்புசெல்வி ஆவடி போக்குவரத்து பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆய்வாளர் சோபனாதேவி பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும்,
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆய்வாளர் விஸ்வநாதன் எண்ணூர் குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆய்வாளர் பாஸ்கர் மணலி நியூ டவுன் சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும், திருமுல்லைவாயல் ஆய்வாளர் கிருஷ்ணன் முத்தாபுதுப்பேட்டை சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும், முத்தாபுதுப்பேட்டை ஆய்வாளர் வேலு மத்திய குற்றப் பிரிவுக்கும், நுண்ணறிவு பிரிவில் இருந்த ஆய்வாளர் லாரன்ஸ் பூந்தமல்லி சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும், பூந்தமல்லி சட்டம்- ஒழுங்கு பிரிவில் இருந்த ஆய்வாளர் பிரபு நுண்ணறிவு பிரிவுக்கும்,
பட்டாபிராம் குற்றப்பிரிவில் இருந்த முருகானந்தம் நுண்ணறிவு பிரிவுக்கும், எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த தனம்மாள் மாங்காடு குற்றப் பிரிவுக்கும், பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த சுகுணா ஆவடி கட்டுப்பாட்டறைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான அறிவிப்பை ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் புதன்கிழமை வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.