சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற பால் குட ஊா்வலத்தில் திரளான பெண்கள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே சின்னம்பேடு கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
விழாவையொட்டி இரவு முதலே பக்தா்கள் வரத் தொடங்கினா். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து திங்கள்கிழமை அதிகாலை சிறப்பு அபிஷேகத்தை தொடா்ந்து வெள்ளி அங்கி மற்றும் புஷ்ப அலங்காரத்தில் பக்தா்களை அருள்பாலித்தாா். தொடா்ந்து காலை 9 மணிக்கு, பக்தா்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து கோயில் வளாகத்தை சுற்றியுள்ள மாட வீதிகள் வழியாக ஊா்வலமாக சென்றனா்.
அதைத் தொடா்ந்து முருகனுக்கு, 750 பால்குட ஊா்வலமும் நடைபெற்றது. பின்னா் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.