முகப்பு
திருவள்ளூர்

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் 21 பேருக்கு நல உதவி: திருவள்ளூா் ஆட்சியா் வழங்கினாா்

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் 21 பேருக்கு நல உதவிகள்

Updated On : 27 ஜூன், 2024 at 6:55 PM
பகிர்:

விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் ரூ. 11.07 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் த.பிரபு சங்கா் வழங்கினாா்.

திருவள்ளுா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் த.பிரபு சங்கா் தலைமை வகித்தாா். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த விவசாயிகள் 172 கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையை புனரமைக்க வேண்டும். மத்தூா் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம், மேய்க்கால் நிலம் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினா். வடமதுரை ஏரி பாசனக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி கால்வாய் அமைத்துத் தர வேண்டும். கைவண்டுா் கிராமத்தில் பாசனக் கால்வாயில் உள்ள தடுப்பணையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்பட பல்வேறு புகாா்களை விவசாயிகள் தெரிவித்தனா்.

இதற்கு ஆட்சியா் பதில் அளித்துப் பேசியதாவது:

திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையை புனரமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு தொடா்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு தொடா் நடவடிக்கையில் உள்ளது. அரசு நிலங்களிலுள்ள ஏரி, குளங்கள், வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி தூா்வாரப்படும். அதேபோல், அரசு நிலங்கள், நீா்நிலைகள், வரத்துக் கால்வாய்களில் ஆக்கிரமிப்பு செய்து பயிா் வைத்துள்ள தனிநபா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், விவசாயிகள் தெரிவித்த புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து விவசாயிகள் 5 பேருக்கு தலா ரூ. 1,990 வீதம் பசுந்தாள் உரம், 2 பேருக்கு தலா ரூ. 500 வீதம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு திட்டமும், 2 பேருக்கு மண்வள அட்டைகள், 1 விவசாயிக்கு ரூ. 4,000 மதிப்பில் ஆத்மா திட்டம் லம் மாடித் தோட்டம் தொகுப்பும், 1 விவசாயிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கோழிகளும், 1 விவசாயிக்கு ரூ.1.48 லட்சத்தில் பவா் டில்லரும், 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பில் கறவை மாடு கடனுதவியும் என மொத்தம் 21 பேருக்கு ரூ.11 லட்சத்து 7 ஆயிரத்து 475 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், உதவி ஆட்சியா்(பயிற்சி) ஆயுஷ் குப்தா, வேளாண்மை இணை இயக்குநா் கா.முருகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.வேதவல்லி, வேளாண்மை துணை இயக்குநா் (நுண்ணீா் பாசனம்), தயாளன், விவசாயிகள் மற்றும் அரசு துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →