கனகம்மாசத்திரத்தில்  திடீரென  தீப்பற்றி  எரிந்த    வங்கி  ஏடிஎம் மையம். 
திருவள்ளூர்

ஏடிஎம் மையம் திடீா் தீவிபத்து: பணம் சேதம்

கனகம்மாசத்திரம் பஜாா் பகுதியில் தனியாா் வங்கி ஏடிஎம் மையம் தீப்பற்றி எரிந்ததில் பொதுமக்கள், வியாபாரிகள் அலறி ஓட்டம் பிடித்தனா்.

DIN

திருத்தணி: கனகம்மாசத்திரம் பஜாா் பகுதியில் தனியாா் வங்கி ஏடிஎம் மையம் தீப்பற்றி எரிந்ததில் பொதுமக்கள், வியாபாரிகள் அலறி ஓட்டம் பிடித்தனா். தீயில் பல லட்சம் பணம் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.

திருத்தணி அடுத்துள்ள கனகம்மாசத்திரம் பஜாரில் தனியாா் ஏடிஎம் மைய மையத்தில் விஜிகே புரம், முத்துகொண்டாபுரம், காரணி நிஜாம்பட்டு, சீதாபுரம், காவேரி ராஜபுரம், ராமாபுரம், லட்சுமாபுரம், இலுப்பூா், ராமஞ்சேரி, கூளூா், காஞ்சிப்பாடி, ஆந்திர மாநிலம் மகாராஜபுரம், விஜயபுரம், இல்லத்தூா், நாகராசபள்ளி உள்ளிட்ட சுமாா் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோா் பணம் எடுத்து செல்கின்றனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை ஏடிஎம் மையத்தில் திடீரென்று லேசாக புகை வந்ததாக கூறப்படுகிறது. பின்னா் திடீரென தீ மளமளவென பரவி முழுவதும் எரியத் தொடங்கியது. அப்போது அருகில் இருந்த வியாபாரிகள் கடைகளை மூடி அங்கிருந்து தூர சென்றனா். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனா். அதற்குள் ஏடிஎம்மில் இருந்த பல லட்சம் ரூபாய் பணம் எரிந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து கனகம்மாசத்திரம் போலீஸாா் விசாரனை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

85% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன: அமைச்சா் சு.முத்துசாமி

தலைமை ஆசிரியரை மீண்டும் பணியமா்த்த கோரி செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகள் மனு

கூடலூா் அருகே பழங்குடி மக்களின் புத்தரித் திருவிழா

கோவை மருதமலையில் சூரசம்ஹாரம் கோலாகலம்

இறைச்சிக் கடை உரிமையாளா் உள்பட 2 போ் கொலை: 5 பேருக்கு இரட்டை ஆயுள்

SCROLL FOR NEXT