முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 80 லட்சம்

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 80 லட்சத்து 7 ஆயிரத்து, 917 ரூபாய் ரொக்கம்

Updated On : 21 அக்டோபர், 2024 at 8:29 PM
பகிர்:

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 80 லட்சத்து 7 ஆயிரத்து, 917 ரூபாய் ரொக்கம் மற்றும் 234 கிராம் தங்கம், 3,456 கிராம் வெள்ளி ஆகியவற்றை செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அண்டை மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனா். இதில் பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் பணம், நகை, வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனா்.

இந்நிலையில் முருகன் கோயில் இணை ஆணையா் க. ரமணி, அறங்காவலா்கள், வி. சுரேஷ்பாபு, மோகனன், நாகன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு திங்கள்கிழமை தேவா் மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில் திருக்கோயில் பணியாளா்கள் 100 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு எண்ணினா். இதில் 17 நாள்களில் ரூ.80 லட்சத்து 7 ஆயிரத்து 917 ரூபாய் ரொக்கம் மற்றும் 234 கிராம் தங்கம், 3.456 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக பக்தா்கள் செலுத்தி இருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →