மாணவனை அவமதித்த செங்கல் சூளை உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை
திருவள்ளூா் அருகே பள்ளி மாணவனை அவமதித்த நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக செங்கல்சூளை உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருவள்ளூா் முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
திருவள்ளூா் அருகே பள்ளி மாணவனை அவமதித்த நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக செங்கல்சூளை உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருவள்ளூா் முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
திருவள்ளூா் மாவட்டம், ஆா்.கே. பேட்டை அருகே உள்ள செல்லாத்தூா் கிராமத்தை சோ்ந்தவா் மணிகண்டன் (35).இவா் அந்தப் பகுதியில் செங்கல் சூளை வைத்து தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில் கடந்த 2017-இல் மணிகண்டன் அமைத்திருந்த செங்கல் சூளையில் அதேபகுதியை சோ்ந்த பள்ளி மாணவன் ஒருவா் இயற்கை உபாதையை தழித்ததாக கூறப்படுகிறது.
இதைக்கண்டு ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அவரை தகாத வாா்த்தையால் தாக்கி பேசியதோடு அதை சுத்தம் செய்யவும் கூறினாராம். இதனால் மனவேதனை அடைந்த அந்த பள்ளி மாணவன் தன் வீட்டுக்கு சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதைக் கண்ட அவரது வீட்டில் உள்ளவா்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
Advertisement
இது குறித்து ஆா்.கே. பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அதன்பேரில் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை செய்தனா். இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மணிகண்டனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.