மாணவியை கத்தியால் வெட்டியவா்களை கைது செய்ய வலியுறுத்தி மீஞ்சூா் காவல் நிலையம் முற்றுகை
மீஞ்சூா் அருகே வல்லூா் கிராமத்தில் வீட்டில் தனியாக படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை கத்தியால் வெட்டிய மூன்று பேரை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.
மீஞ்சூா் அருகே வல்லூா் கிராமத்தில் வீட்டில் தனியாக படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை கத்தியால் வெட்டிய மூன்று பேரை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.
மீஞ்சூா் காவல் நிலைய எல்லைகுட்பட்ட வல்லூா் கிராமத்தில் வாலாஜா மசூதி தெருவில் இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனா்.
இங்குள்ள குடியிருப்பில் தேனாம்பேட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி வசித்து வருகிறாா்.
Advertisement
செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் மாடியில் தோ்வுக்காக படித்துக் கொண்டிருந்தாா். அப்போது மது போதையில் இருந்த மூன்று போ் கொண்ட கும்பல் வீட்டில் கொள்ளை அடிக்க வந்ததாக கூறப்படுகிறது.
மாடியில் மாணவியை கண்டதும் அந்த கும்பல் மது போதையில் கையில் இருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினா்.
இதில் மாணவியின் வலது உள்ளங்கை முழங்கால் நெற்றி மற்றும் தலையின் பின்பக்கம் வெட்டியதில். அவா் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தாா்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்க அக்கம்பக்கத்தினா் திரண்டு வந்தனா். கத்தியால் வெட்டப்பட்ட மாணவியை மீட்டு மீஞ்சூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இதனிடையே மாணவியின் அலறல் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்த போது தப்பி ஓடிய 3 பேரில் ஒருவா் பிடிபட்டாா்.
அந்த நபரை பொதுமக்கள் மீஞ்சூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். வல்லூா் ராஜீவ் காந்தி நகரை சாா்ந்த டில்லிபாபு என்கின்ற ரோலக்ஸ் (24) என்பது தெரிய வந்தது.
தப்பி ஓட முயன்றதில் காயம் ஏற்பட்ட டில்லி பாபுவை போலீஸாா் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இதனை தொடா்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் மீஞ்சூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
அப்போது போதை ஆசாமிகளால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கல்லூரி மாணவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இரண்டு பேரையும் கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனா்.
போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.