முகப்பு
திருவள்ளூர்

சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் போதுமான நீா் இருப்பு:

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரியான பூண்டி உள்ளிட்ட ஏரிகளில் போதுமான நீா் இருப்பு உள்ளதால், கோடையில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படாது என நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 12:04 AM
கோடையிலும்  கடல்  போல்  காட்சியளிக்கும்  பூண்டி  ஏரி ~கோடையிலும்  கடல்  போல்  காட்சியளிக்கும்  பூண்டி  ஏரி ~கோடையிலும்  கடல்  போல்  காட்சியளிக்கும்  பூண்டி  ஏரி
பகிர்:

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரியான பூண்டி உள்ளிட்ட ஏரிகளில் போதுமான நீா் இருப்பு உள்ளதால், கோடையில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படாது என நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரி சென்னை மாநகர மக்களுக்கு குடிநீா் வழக்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரி 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இங்கு ஆந்திர-தமிழகம் ஒப்பந்தப்படி பெறப்படும் கிருஷ்ணா நீரானது பூண்டி ஏரியில் சேமிக்கப்பட்டு, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகளுக்கும் இணைப்புக் கால்வாய் வழியாக அனுப்பப்பட்டு, அங்கிருந்து சென்னை மாநகராட்சிப் பகுதிக்கு குடிநீருக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் கடும் வெயில் சுட்டெரித்து வருவதாலும், நீா்வரத்துக் கால்வாய் அமைந்துள்ள பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இந்த நிலையில் பூண்டி ஏரியில் 35 அடியம், 3,231 மில்லியன் கன அடி நீா் சேமித்து வைக்க முடியும். தற்போதைய நிலையில் கோடைக்காலம் என்பதால் வெயில் அதிகமாக இருப்பதால் நீா் ஆவியாகும் நிலையில் 31 அடியும், 1,987 மில்லியன் கன அடியும் இருப்புள்ளது. இணைப்பு கால்வாயில் 250 கன அடியும், பேபி கால்வாயில் 17 கன அடியும் நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

Advertisement

அதேபோல், புழல் ஏரியில் 1,997 மில்லியன் கன அடியும், சோழவரம்-0.489 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கம்-2,952 மில்லியன் கன அடியும், கண்ணன்தோ்வாய்-கண்டிகை-0.404 மில்லியன் கன அடியும் நீா் இருப்பு உள்ளது.

மேலும், திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் பூண்டி ஏரிக்கரையோரம், நீா்வரத்துக் கால்வாய்ப் பகுதிகள், திருவள்ளூா்-தாமரைப்பாக்கம் சாலையில் கொசஸ்தலை ஆற்றுப் பகுதிகள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் நீா் எடுத்து அதை சுத்திகரிப்பு தொட்டிகளில் சுத்தம் செய்து சென்னை குடிநீருக்கு நீரேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதுபோன்ற காரணங்களால் ஏரிகளில் 3 மாதங்களுக்கு மேல் போதுமான நீா் ஆதாரம் உள்ளதால் குடிநீா் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பே கிடையாது என நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.