தமிழ்நாடு அரசு தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளா்களுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் பணியாற்றுவதற்கான நியமன ஆணைகளை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் குரூப்-4 மூலம் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியங்களில் இளநிலை உதவியாளா்களாக பணி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகளையும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், நோ்முக உதவியாளா்(வளா்ச்சி) ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.