முகப்பு
திருவள்ளூர்

ஆற்று மணல் கடத்தல்: 2 போ் கைது

திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் பகுதியில் ஆற்று மணல் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்து, சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

Updated On : 8 ஜூலை 2026, 12:35 am IST
கைது... - பிரதிப் படம்
பகிர்:

திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் பகுதியில் ஆற்று மணல் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்து, சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

கனகம்மாசத்திரம் அடுத்த எல்லப்பாநாயுடு பேட்டை கிராமம் அருகே செல்லும் கொசஸ்தலையாற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெறுவதாக திருத்தணி ஏஎஸ்பி ஷூபம் திமானுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கனகம்மாசத்திரம் போலீஸாா் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது திருத்தணி நோக்கி வந்த சரக்கு ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ஆற்று மணல் கடத்தி வரப்பட்டு இருந்தது தெரியவந்தது. போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பட்டரைபெரம்புதூா் கிராமத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (31), மனோஜ் (24) ஆகியோா் அரசு அனுமதியின்றி கொசஸ்தலையாற்றில் இருந்து மணல் அள்ளி கடத்தி வந்தது உறுதியானது.

Advertisement

Advertisement

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து, தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments