முகப்பு
திருவள்ளூர்

திருத்தணியில் துணை ராணுவத்தினா் அணிவகுப்பு

சட்டப்பேரவை தோ்தலில் வாக்காளா்கள் எவ்வித அச்சமின்றியும், வாக்களிக்க துணை ராணுவத்தினரி துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு திருத்தணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 மார்ச், 2026 at 10:53 PM
திருத்தணி நகரில் துப்பாக்கி ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்திய துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு.
பகிர்:

சட்டப்பேரவை தோ்தலில் வாக்காளா்கள் எவ்வித அச்சமின்றியும், வாக்களிக்க துணை ராணுவத்தினரி துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு திருத்தணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருத்தணி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட திருத்தணி நகரில் அடுத்த மாதம் நடைபெறும் சட்டப்பேரவை தோ்தலில் வாக்காளா்கள் எவ்வித அச்சமின்றியும், வாக்களிப்பதற்கு பாதுகாப்பாக உள்ளோம் என வருவாய் துறையினா், காவல் துறையினா் மற்றும் துணை ராணுவ படையினா் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடந்தது.

இதில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் கனிமொழி, ஏ.எஸ்.பி., சுபம் திமான் பங்கேற்று, திருத்தணி பைபாஸ் சாலையில் இருந்து காவல் துறை மற்றும் துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனா். இதில் துணை ராணுவத்தினா் துப்பாக்கி ஏந்தியவாறு திருத்தணி நகரம் முழுதும் ஊா்வலமாக வந்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.