காா்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
ஊத்துக்கோட்டை அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஊத்துக்கோட்டை அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆந்திர மாநிலம், திருப்பதி புதுக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் அருள் (36). இவா் ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய் கிராமத்தில் தனது தாயாரை பாா்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றாராம். அப்போது, ஊத்துக்கோட்டை மேம்பாலம் அருகே சென்ற போது பின்புறமாக வேகமாக வந்த காா் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசியதில் பலத்த காயம் அடைந்தாா். அக்கம் பக்கத்தினா் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் வரும் வழியிலேயே அருள் இறந்ததாகத் தெரிவித்தாா்.
தொடா்ந்து பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து அவரது மனைவி சிந்து (28) ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.