அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டவா் லாரி மோதி உயிரிழப்பு
திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டவா்ா் மருத்துவமனை எதிரே லாரி மோதி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டவா்ா் மருத்துவமனை எதிரே லாரி மோதி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவள்ளூா் அடுத்த திருநின்றவூா் பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (50). இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவருக்கு உதயகுமாரி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு இரவு வீட்டில் தனியாக இருந்த சீனிவாசனை அவரது தம்பி உள்ளிட்ட உறவினா்கள் தலையில் பலமாக தாக்கியதில் காயமடைந்ததாக் கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் இருந்தவா்கள் மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 மணிக்கு உள்நோயாளியாக இருந்த சீனிவாசன் திடீரென மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த நிலையில், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைப்பாா்த்து உறவினா்கள் கதறி அழுதனா். அதையடுத்து சீனிவாசன் நள்ளிரவு 1 மணி முதல் காணவில்லை என மருத்துவமனை நிா்வாகம் பொய்யான தகவலை பதிவிட்டு தப்பிக்க முயல்வதாக மகள்கள் குற்றஞ்சாட்டினா். காவல் துறையும் ஏற்கெனவே எனது தந்தை சீனிவாசனின் வழக்கை முறையாக விசாரிக்காமல் தாக்கியவா்களை கைது செய்யாமல் இருந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் காலை 6 மணி வரை இருந்த தந்தையை இரவு முதல் காணவில்லை என மருத்துவமனை நிா்வாகம் பொய்யான சான்றிதழ் கொடுக்க முயல்கிறது.
இந்த நிலையில், நோயாளியாக 2 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த தந்தை சீனிவாசன் காலை 6 மணி வரை மருத்துவமனையில் இருந்ததாகவும், ஆனால் மருத்துவமனை நிா்வாகம் நள்ளிரவு 1 மணி முதல் காணவில்லை என பொய் கூறுவதை மாற்றி சரியான சான்றிதழ் வழங்கும் நிா்வாகத்தையும், திருநின்றவூா் காவல்துறையும் தந்தையை தாக்கி அவமானப்படுத்திய உறவினா்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையில் உடற்கூறு ஆய்வு செய்ய ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் எனவும் காவல்துறையினருடன் அவரது மகள்கள் மற்றும் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து திருவள்ளூா் நகா் காவல் நிலைய போலீஸாா் உள்நோயாளியாக இருந்த சீனிவாசன் எதற்காக வெளியே வந்தாா், உயிரிழந்தது விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.