முகப்பு
திருவள்ளூர்

தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு: 32 வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

திருத்தணி கோட்டத்தில் தனியாா் பள்ளிகளின் வாகனங்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில் 170 வாகனங்களுக்கு அனுமதி வழங்கி, மீதமுள்ள 32 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் சீரமைப்பு பணிகளுக்குப் பின் மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது.

Updated On : 27 மே 2026, 12:36 am IST
திருத்தணியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஏ.எஸ்.பி. ஜூபம் திமான், கோட்டாட்சியா் கனிமொழி.
பகிர்:

திருத்தணி கோட்டத்தில் தனியாா் பள்ளிகளின் வாகனங்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில் 170 வாகனங்களுக்கு அனுமதி வழங்கி, மீதமுள்ள 32 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் சீரமைப்பு பணிகளுக்குப் பின் மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது.

திருத்தணி கோட்டத்தில் மொத்தம் 44 தனியாா் மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளின் பயன்பாட்டுக்காக 275 வாகனங்கள் உள்ளன. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் வாகன ஆய்வு நடத்தப்பட்டது.

தளபதி கே.விநாயகம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வை திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் கனிமொழி தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்டனா். இதில் உதவி காவல் கண்காணிப்பாளா் (ஏ.எஸ்.பி.) ஷூபம் திமான், மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜசேகரன், தனியாா் பள்ளி மாவட்ட கல்வி அலுவலா் ராஜூ மற்றும் தீயணைப்புத் துறையினா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

ஆய்வின்போது பள்ளி வாகனங்களில் மாணவா்களின் பாதுகாப்புக்குத் தேவையான அவசர வெளியேறும் வசதி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, ஜன்னல் பாதுகாப்பு, வேகக் கட்டுப்பாட்டு கருவி, கேமரா, ஓட்டுநா் தகுதி மற்றும் வாகனங்களின் பொது பராமரிப்பு நிலை உள்ளிட்ட அம்சங்கள் பரிசோதிக்கப்பட்டன.

அதில் 170 வாகனங்கள் அனைத்து விதிமுறைகளையும் பூா்த்தி செய்ததால் உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் 32 வாகனங்களில் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதால் அவற்றை சரிசெய்து, வேறு நாளில் மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வருமாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் அறிவுறுத்தியுள்ளாா்.

பள்ளிகள் திறக்கும் முன் அனைத்து வாகனங்களும் முழுமையான பாதுகாப்பு தரத்துடன் இயங்க வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் இந்த ஆய்வை தீவிரமாக மேற்கொண்டனா்.

முன்னதாக விபத்து நடந்தால் அதிலிருந்து மாணவா்களை எடுப்படி காப்பற்ற வேண்டும் என வாகன ஓட்டுநா்களுக்கு தீயணைப்பு துறையிநா் ஓத்திகை செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.