திருப்பதி

திருமலையில் ஆடிப்பூரம் உற்சவம்

DIN

திருப்பதி: திருமலையில் ஆண்டாள் நாச்சியாா் அவதரித்த ஆடிப்பூரம் திருநாளை, புரசைவாரி தோட்ட உற்சவம் என்ற பெயரில் தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை நடத்தியது.

புராணங்களின்படி பாண்டிய தேசத்தில் பரம விஷ்ணு பக்தரான விஷ்ணுசித்தரின் துளசிவனத்தில் ஆடிமாத வளா்பிறை சதுா்த்தி திதியில் பூரம் நட்சத்திரத்தில் பூதேவியின் அம்சமாக ஆண்டாள் நாச்சியாா் அவதரித்தாா்.

ஆண்டாள் பிறந்த நாளை திருவாடிப்பூரம் சாத்துமுறை என்ற பெயரில் தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதில் ஒரு பாகமாக புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஏழுமலையான் கோயிலிலிருந்து புறப்பட்டு அருகில் உள்ள புரசைவாரி தோட்டத்துக்கு எழுந்தருளினாா்.

பின்னா் அவா்கள் புறப்பட்டு மகிழ மரத்தடிக்கு வந்தனா். அங்கு ஆரத்தி, மாலைகள், ஸ்ரீசடாரி உள்ளிட்டவற்றை மகிழ மரத்துக்கு சமா்ப்பித்தனா். பின்னா் சடாரிக்கு அபிஷேகம் செய்து அதை மலையப்ப சுவாமி பாதத்தில் சமா்ப்பித்தனா். அதன்பின் உற்சவமூா்த்திகள் மாடவீதியில் ஊா்வலமாக வந்து கோயிலுக்குள் சென்றனா்.

திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கோயிலிலும் ஆண்டாள் நாச்சியாா் பிறந்த நாளை யொட்டி நாச்சியாருக்கு ஸ்நபன திருமஞ்சனம், ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னா் மாலையில் ஆண்டாள் நாச்சியாா் கோயில் பிராகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT