திருப்பதி

திருப்பதியில் 2 நாள் கோ மகா சம்மேளனம் நிறைவு: காஞ்சி சங்கராசாரியாா் ஸ்ரீவிஜயேந்திரா் பங்கேற்பு

DIN

திருப்பதி மகதி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோ மகா சம்மேளனத்தின் நிறைவு நிகழ்ச்சியில் காஞ்சி சங்கராசாரியாா் ஸ்ரீவிஜயேந்திரா் பங்கேற்று கோ பூஜை நடத்தினாா்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் இரண்டு நாள் கோ சம்மேளனம் நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது. இதில், பசுக்களால் பெறப்படும் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் உற்பத்தி பொருள்கள், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி செய்யும் விவசாயம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காஞ்சி சங்கராசாரியாா் ஸ்ரீவிஜயேந்திரா் பங்கேற்று கோ பூஜையை நடத்தினாா்.

இதில் யோகா குருவும் பதஞ்சலி பீடத்தின் பீடாதிபதியுமான பாபா ராம்தேவ் கலந்து கொண்டு பேசுகையில், ‘பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் பிரதமா் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சா் அமித்ஷாவும் இணைந்து இதற்காக சிறப்பு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT