திருப்பதி

திருமலையில் செப். 9-இல் ஸ்ரீவராக ஜெயந்தி

DIN

திருப்பதி: திருமலையில் செப்.9-ஆம் தேதி ஸ்ரீவராக ஜெயந்தி உற்சவம் நடக்கிறது.

திருமலை ஆதிவராக ஷேத்திரமாகக் கருதப்படுகிறது. இங்கு திருக்குளக்கரையில் எழுந்தருளியுள்ள பூவராக சுவாமி ஏழுமலையான் கோயில் கொள்ள நிலம் வழங்கியதாக பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இங்கு முதல் தரிசனம், நெய்வேத்தியம், மணியோசை அனைத்தும் வராக சுவாமிக்கு மட்டுமே நடைபெற்று வருகிறது. அவருக்கு நடத்திய பிறகே ஏழுமலையானுக்கு நடத்தப்படும்.

அத்தகைய பெருமை வாய்ந்த இங்கு தேவஸ்தானம் ஸ்ரீவராக ஜெயந்தி உற்சவத்தை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி செப்.9-ஆம் தேதி வராக ஜெயந்தியை முன்னிட்டு பூவராக சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட உள்ளன. கரோனா நிபந்தனைகளைப் பின்பற்றி இந்த உற்சவத்தை தனிமையில் நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொன்றைப் பூ..!

மோடி அரசியல் குடும்பத்தில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உறுதி: ராகுல்

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

சிரிப்பே துணை!

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

SCROLL FOR NEXT