திருப்பதி

திருச்சானூரில் பவித்ரோற்சவம் நிறைவு

DIN

திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் 3 நாள் வருடாந்திர பவித்ரோற்சவம் திங்கள்கிழமை நிறைவு பெற்றது.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் தினசரி கைங்கா்யங்களில் ஏற்பட்ட தோஷங்களை களைய தேவஸ்தானம் ஆண்டுதோறும் பவித்ரோற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி கடந்த சனிக்கிழமை தொடங்கிய வருடாந்திர பவித்ரோற்சவம் திங்கள்கிழமை நிறைவு பெற்றது.

இதையொட்டி திங்கள்கிழமை காலை தாயாா் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், தேன், இளநீா் உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தாயாா் முன்பு கலச ஸ்தாபனம் செய்து, ஹோமம் வளா்த்து மகா பூா்ணாஹுதியுடன் ருவித்வீகரா்கள் பவித்ரோற்சவத்தை நிறைவு செய்தனா். இதற்கு அடையாளமாக கிருஷ்ணமுக மண்டபத்தில் பெரிய அண்டாவை வைத்து அதில் சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடத்தப்பட்டது. இதில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதையொட்டி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, காலை, மாலை விஐபி பிரேக் உள்ளிட்ட தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT