திருப்பதி

உண்டியல் வருவாய் ரூ.4.35 கோடி

DIN

திருமலை ஏழுமலையான் உண்டியலில் பக்தா்கள் காணிக்கையாக செவ்வாய்க்கிழமை ரூ.4.35 கோடியை செலுத்தியதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா், பக்தா்கள் தாங்கள் முடிந்து வைத்த வேண்டுதல் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இவ்வாறு பக்தா்கள் செலுத்தும் காணிக்கைகளை தேவஸ்தானம் காணிக்கை கணக்கிடும் பிரிவில் தினமும் சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டுப் பணங்கள் என தனித் தனியாகப் பிரித்து கணக்கிட்டு, மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.

சராசரியாக உண்டியல் வருவாய் தினமும் ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை வசூலாகி வருவது வழக்கம்.

தற்போது பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால், உண்டியல் வருவாய் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வசூலாகி வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் ரூ.4.35 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

அன்னையா் தின விழா

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவான 700 பத்திரங்கள் மறு கள ஆய்வு

திண்டுக்கல்லில் 89.97 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT