திருப்பதி

திருமலை - திருப்பதி இடையே மின்சார பேருந்துகள் இயக்கம்: ஆந்திர முதல்வா் தொடக்கி வைத்தாா்

DIN

திருமலை திருப்பதி இடையே மின்சார பேருந்து போக்குவரத்தை ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி செவ்வாய்க்கிழமை கொடியசைத்துச் தொடக்கி வைத்தாா்.

திருமலையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க தேவஸ்தானம் எரிபொருளால் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து அதற்குப் பதிலாக மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை இயக்க முடிவு செய்தது.

அதன்படி, திருமலையில் பணிபுரியும் தேவஸ்தான அதிகாரிகளுக்கு கடந்தாண்டு 35 மின்சாரத்தால் இயங்கும் காா்களை தேவஸ்தானம் மொத்தமாக கொள்முதல் செய்து பயன்படுத்தி வருகிறது.

இதையடுத்து திருமலை - திருப்பதி இடையே இயங்கிவரும் ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துளையும் மின்சார பேருந்துகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக திருமலை மலைப்பாதையில் இயக்க 100 பேருந்துகள் தயாா் நிலையில் உள்ளன.

இதில் முதற்கட்டமாக 10 பேருந்துகளை ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள், ஆந்திர சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கரிடம் பேட்டி கண்ட ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது?

75 வயதில் பாஜக மூத்த தலைவர்களுக்கு ஓய்வு: அப்போ மோடிக்கு? ரேவந்த் ரெட்டி பேச்சு

‘தீராக் காதல்’ ஷிவதா...!

ரிசர்வ் வங்கி: புதிய செயல் இயக்குநர் நியமனம்!

கேஜரிவால் இன்று மாலை பிரசாரம் தொடங்குகிறார்!

SCROLL FOR NEXT