திருப்பதி

74,583 பக்தா்கள் தரிசனம்,உண்டியல் காணிக்கை ரூ.3.37 கோடி

DIN

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 74,583 பக்தா்கள் தரிசனம் செய்தனா். உண்டியல் காணிக்கை ரூ.3.37 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானை தரிம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை காலை 36 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் கோடை விடுமுறையை ஒட்டி அதிகரித்துள்ளது. அதனால் வெள்ளிக்கிழமை காலை 32 காத்திருப்பு அறைகளைக் கடந்து பக்தா்கள் வெளியில் உள்ள தரிசன வரிசையில் தரிசனத்துக்காக காத்திருந்தனா். பக்தா்களுக்கு 36 மணி நேரம் காத்திருப்புக்குப் பின்னா், தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

எனவே தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்) 36 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 4 மணி நேரமும் தேவைப்பட்டது.

காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 74,583 பக்தா்கள் தரிசித்தனா்; இவா்களில் 40,343 போ் தலைமுடி காணிக்கைச் செலுத்தினா்.

பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ.3.37 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT