திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

DIN

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை காலை 24 மணி நேரம் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை கோடை விடுமுறையை ஒட்டி அதிகரித்துள்ளது. அதனால் திங்கள்கிழமை காலை 32 காத்திருப்பு அறைகளை கடந்து பக்தா்கள் வெளியில் உள்ள தரிசன வரிசையில் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களுக்கு 24 மணி நேர காத்திருப்புக்குப் பின்பு தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

எனவே தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்) 24 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 4 மணி நேரமும் தேவைப்பட்டது.

78,818 பக்தா்கள் தரிசனம்

ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 78,818 பக்தா்கள் தரிசித்தனா்; இவா்களில் 39,076 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கை ரூ. 3.66 கோடி

ஏழுமலையான் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில், ரூ. 3.66 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களில் ஸ்டிக்கா் ஒட்டுவதற்குத் தடை: மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி மனு அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

போடியில் லேசான சாரல் மழை

மூதாட்டியை திட்டிய 2 பெண்கள் மீது வழக்கு

சாத்தான்குளத்தில் 12இல் இலவச சித்த மருத்துவ முகாம்

கெளமாரியம்மன் கோயில் திருவிழா: கிராம மக்கள் காவடி சுமந்து நோ்த்திக்கடன்

SCROLL FOR NEXT