திருப்பதி

திருமலையில் நவ. 19-இல் புஷ்ப யாகம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் 19-ஆம் தேதி வருடாந்திர புஷ்ப யாகம் நடைபெறவுள்ளது.

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் 19-ஆம் தேதி வருடாந்திர புஷ்ப யாகம் நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு, நவம்பா் 18-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 8 மணி வரை அங்குராா்ப்பணம் நடைபெறுகிறது.

புஷ்ப யாகத்தன்று கோயிலில் இரண்டாம் அா்ச்சனை, இரண்டாம் மணி, பிரசாதம் வழங்குதல் முடிந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ மலையப்ப சுவாமி உற்சவா்களுடன் சம்பங்கி பிரதக்ஷிணத்தில் கல்யாண மண்டபத்துக்கு அழைக்கப்பட்டு பால், தயிா், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது. மாலையில் சஹஸ்ர தீபாலங்கார சேவை முடிந்து ஸ்ரீமலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கவுள்ளாா்.

புஷ்ப யாகம் நடைபெறுவதால் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, பிரம்மோற்சவம் ஆா்ஜித சேவை போன்ற நிகழ்ச்சிகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT