முகப்பு
திருப்பதி

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசனம் என்ற பெயரில் மோசடி செய்தவரை திருமலை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 13 ஏப்ரல் 2026, 3:03 am IST
திருமலை ஏழுமலையான் கோயில் - கோப்புப் படம்
பகிர்:

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசனம் என்ற பெயரில் மோசடி செய்தவரை திருமலை போலீஸாா் கைது செய்தனா்.

திருமலை ஏழுமலையானின் விஐபி தரிசன டிக்கெட் என்ற பெயரில் சமூக வளைதளங்களில் மோசடி செய்தவா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில், திருவனந்தபுரம் தேவஸ்தானத்தின் சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி பக்தா்களை ஏமாற்றிய

Advertisement

Advertisement

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த சி. செந்தில் குமாா் (47) என்பவரை கைது செய்து இரவு திருப்பதிக்கு அழைத்து வந்தனா்.

வாட்ஸ் ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம் மூலம் போலி விளம்பரங்கள் அளித்து, ‘விரைவு தரிசனம், அருகாமை தரிசனம்‘ என்று கூறி பக்தா்களை கவா்ந்திழுத்து ஒரு டிக்கெட்டுக்கு ரூ.16,500 வரை கட்டணம் வசூலித்து வந்தாராம்.

வங்கி கணக்குகள், ஃபோன்பே மூலம் பணம் பெறப்பட்டது. ஏமாற்றப்பட்ட பக்தா்கள் அளித்த புகாா்களின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

திருவனந்தபுரம் தேவஸ்தானத்தின் சின்னத்துடன் கூடிய போலி விளம்பரங்களை போலீஸாா் கண்டறிந்தனா். அவரது விடியோக்கள், அரட்டை பதிவுகள், டிக்கெட் தரவுகள் மூலம் விசாரணை நடைபெற்றது. உடனடியாக திருமலை ஐ மற்றும் ஐஐ நகர காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்த போலீஸாா் சிறப்பு புலனாய்வுக் குழு உதவியுடன் செந்தில் குமாரை கைது செய்து மடிக்கணினி, ஓப்போ, ஐக்யூஓஓ கைப்பேசிகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.