திருப்பதியில் 3 மாதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து!
விஐபி தரிசனம் ரத்து செய்வது பற்றி..
திருமலை திருப்பதியில் மூன்று மாதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோடைக்காலம் துவங்கியுள்ளதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குப் படையெடுத்து வருகின்றனர்.
வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து வெளியே பாட்ட கங்கம்மா கோயில் அருகில் உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை வெள்ளிக்கிழமை முதல் கோடை விடுமுறை முடியும் வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். எனினும் அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இனி தரிசன டிக்கெட்டுகள் இல்லாமல் ஏழுமலையான் தரிசனத்துக்காக திருமலைக்கு வரும் பக்தா்கள் காத்திருப்பு அறைகளில் காத்திருந்து மட்டுமே தரிசனத்துக்குச் செல்ல முடியும். எனவே பக்தா்கள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதனால், கோடைக்காலம் முடியும் வரை, மூன்று மாதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், அதோடு திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன் வழங்குவதையும் ரத்து செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. கோடைக்காலம் முடியும் வரை இந்த தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The temple administration at Tirumala Tirupati has decided to cancel VIP Darshan for a period of three months.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.