திருப்பதியில் வாழ்நாள் முழுவதும் விஐபி தரிசனம்! காவல்நிலையத்தில் புகார்! பின்னணி என்ன?
திருப்பதியில் வாழ்நாள் முழுவதும் விஐபி தரிசனம் பெற்றுத் தருவதாக வந்த விளம்பரம் குறித்து காவல்நிலையத்தில் புகார்
திருப்பதி நெடுஞ்சாலை அருகே நிலம் வாங்குவோருக்கு வாழ்நாள் முழுவதும் விஐபி தரிசனம் பெற்றுத் தரப்படும் என விளம்பரம் செய்த நில விற்பனை நிறுவனத்தின் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார் அளித்திருக்கிறது.
சமூக வலைத்தளங்களில், நிலத்தை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் கொடுத்த விளம்பரங்கள், தவறான தகவலைப் பரப்புவதாக அமைந்துள்ளதாகக் கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், இதுபோன்ற எந்த தனியார் நிறுவனத்துடனும், திருப்பதி தேவஸ்தானம் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை, எனவே திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து வரும் தனியார் நிறுவன விளம்பரங்களில் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியிருக்கிறது.
Advertisement
Advertisement
இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைத்து சேவைகள், பக்தர்களுக்கான தரிசன முறைகள், டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வ விதிமுறைகள் படியே வழங்கப்படும். இதுபோன்ற எந்த தனியார் நிறுவனங்களும் உறுதிமொழி அளிக்க முடியாது.
வணிக ரீதியாக கோயில் பெயரை பயன்படுத்துவது சட்டத்துக்கு விரோதமானது. எனவே, காவல்துறையில் இது குறித்து முறையிடப்பட்டுள்ளது. உடனடியாக விசாரணை நடத்தி உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இது குறித்த விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் இருந்தும் நீக்கப்படும். விளம்பரம் கொடுத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.