FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கோயில்களில் விஐபி தரிசனம்: பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியீடு!

கோயில்களில் விஐபி தரிசனம் தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்களை இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை வழங்கியுள்ளது.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 8:40 am IST
ஸ்ரீரங்கம் - கோப்புப் படம்
பகிர்:

கோயில்களில் விஐபி தரிசனம் தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்களை இந்து சமய அறநிலையத்துறை வழங்கியுள்ளது.

கோயில்களில் சாமி தரிசனம் செய்ய பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகையில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதில், பக்தர்களுக்கு அசௌகரியம் ஏற்படாமலும், கோயில்களின் புனிதத் தன்மை பாதிக்கப்படாத வகையிலும் நடைமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அவை,

1. திரைத்துறை முதலான கலைத்துறை பிரபலங்கள், முக்கிய நபர்கள் திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வருவதாக தெரியவந்தால் குறைந்தது ஒரு நாளுக்கு முன்பாக அல்லது தெரிய வந்த உடன் அவர்கள் வரவிருக்கும் திருக்கோயில், வருகை நேரம், அவர்களுடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரங்களையும் ஆணையர் அலுவலகத்திற்கு கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும்.

2. அத்தகைய வருகையின்போது. திருக்கோயில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுப்பதற்கும். காணொளி பதிவு செய்வதற்கும் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது.

3. பிரபலங்கள் அல்லது முக்கிய பிரமுகர்களின் வருகையின்போது, பொதுப் பக்தர்களின் தரிசனத்திற்கு எந்தவித இடையூறு ஏற்படாத வகையில், அவர்களின் நுழைவு மற்றும் இயக்கம் உரிய ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். திருக்கோபிலின் புனிதத் தன்மையும். மரபு சார்ந்த ஒழுங்கும் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது.

4. முன்கூட்டியே அனுமதி வழங்கப்பட்டவர்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக அவசியமான அலுவலர்கள் பணியாளர்கள் மட்டுமே பிரபலங்கள் அல்லது முக்கிய பிரமுகர்களுடன் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்த அறிவுறுத்தல்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் எந்த விதிவிலக்கும் இன்றி இதனைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

VIP Darshan in Temples: Procedures to be Followed Released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments