திருமலையில் உண்டியல் காணிக்கை ரூ.4.57 கோடி (கோப்புப்படம்) 
திருப்பதி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.57 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.57 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.57 கோடிவசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 8 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 74, 415 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 22,313 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.57 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

நான் இன்னும் விஜய் மற்றும் தவெகவை அடிக்க ஆரம்பிக்கவில்லை! - Annamalai | TVK Vijay | BJP

பிப். 9 முதல் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு! சென்னையில் அல்ல பெங்களூரில்!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன டிக்கெட்டில் முறைகேடு: 2 ஊழியர்கள் பணியிடைநீக்கம்

இனி வாரத்தின் 7 நாள்களும் ஒளிபரப்பாகும் சிங்கப் பெண்ணே தொடர்!

ராணி முகர்ஜியின் ஒரேயொரு பியூட்டி சீக்ரெட் இதுதான்!

SCROLL FOR NEXT