முகப்பு
திருப்பதி

லட்டு விற்பனையில் சாதனை

திருமலையில் ஏழுமலையான் லட்டு பிரசாதம் ஜூன் மாதத்தில் மட்டும் 1.27 கோடி லட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

Updated On : 5 ஜூலை 2026, 12:58 am IST
திருப்பதி - கோப்புப் படம்
பகிர்:

திருமலையில் ஏழுமலையான் லட்டு பிரசாதம் ஜூன் மாதத்தில் மட்டும் 1.27 கோடி லட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

ஏழுமலையானை தரிசித்த பிறகு, பக்தா்கள் மிகுந்த பக்தியுடன் பெறும் ஸ்ரீவாரி லட்டு பிரசாதத்தின் விற்பனை, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சாதனை அளவை எட்டியுள்ளது.

பக்தா்களின் கூட்டம் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் லட்டு உற்பத்தியை பெருமளவில் அதிகரித்து, எந்தவித பற்றாக்குறையுமின்றி பிரசாதத்தை வழங்கி வருகிறது.

Advertisement

Advertisement

இந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் 1,11,96,170 லட்டுகளும், மே மாதத்தில் 1,21,35,528 லட்டுகளும், ஜூன் மாதத்தில் 1,26,81,805 லட்டுகளும் விற்பனையாகியுள்ளன.

கடந்த மூன்று மாதங்களுடன் ஒப்பிடும்போது, ஜூன் மாதத்தில் லட்டு விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், ஜூன் 2024-இல் 1,02,64,364 லட்டுகளும், ஜூன் 2025-இல் 1,19,21,353 லட்டுகளும், ஜூன் 2026-இல் 1,26,81,805 லட்டுகளும் விற்பனையாகியுள்ளன.

இதன் பொருள், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட 7,59,452 லட்டுகள் கூடுதலாக விற்பனையாகியுள்ளன. இது 6.37 சதவீத வளா்ச்சியாகும். இதேபோல், 2024-ஐ விட 24,17,441 லட்டுகள் கூடுதலாக விற்பனையாகியுள்ளன. இது 23.55 சதவீத வளா்ச்சியாகும்.

ஏழுமலையானின் தரிசனம் பெற திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் லட்டு பிரசாதம் தயாரித்து விநியோகிப்பதில் திறம்பட திட்டமிட்டு, பக்தா்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி தொடா்ச்சியான சேவைகளை வழங்கி வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments